முகநூலிலிருந்து

Arun Kumar shared his photo.
நம்மாழ்வார் ஐயா நம்முடனே இருக்கிறார்
வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின், கடமையாளர்கள் ஓர் சிறப்பு ஆய்வுக் கோர்வை அத்தியாயத்தில் இருந்து… ஒருவர் வாழும் போது தவித்த வாய்க்கு தண்ணி கொடுக்காதவர்கள், அவர் இறந்தப்பின் வாய்க்கரிசி போட்ட கதையாக, உண்மையான கடமையாளர்களை, அவர்கள் வாழும் போது, சமூகம் அ(வ்வ)ளவாக கண்டு கொள்வதில்லை. ஆனால், அவர்கள் போய் சேர்ந்தப்பின், சகல மரியாதைகளும் வழங்கப்படுகிறது. இதனால், யாருக்கென்ன பயன் என்கிற கேள்வியும், கூடவே, இக்கடமையாளர்கள் மட்டும் உலகம் உள்ளவரை வாழ இயற்கை வழி செய்யக் கூடாதா… ஆனால், அற்பர்களுக்கு தரும் வாழ்நாளை கூட, இயற்கை கடமையாளர்களுக்கு தராமல், காரியம் கைகூடி வரும் வேளையில் அழைத்துக் கொள்கிறதே என்கிற ஏக்கமும், எண்ணமும் மனதில் நேற்றுவரை இருந்தது. இதே மனநிலையில் உங்களில் பலரும் இருக்கலாம். இந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்த 30-12-2013 அன்றுதாம், இயற்கை விவசாய கடமையாளர் நம்மாழ்வாரும் இயற்கை எய்தினார். இந்த நூலை எழுதி முடித்த பிறகு, முதல் வேளையாக அவரை சந்திக்க வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, மேற்படி எனது எண்ணங்கள் தீவிரமானது. அதேசமயம், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற தத்துவத்தின்படி ஆராய்ந்து பார்த்தால், நமது எண்ணங்கள் இயற்கைக்கு முரணாக இருக்கின்றனவே என்றும் தோன்றின. இறுதியில், ‘நீ செய்ய வேண்டிய கடமைகளை செய்வனே செய்து விட்டாய்; உன்னைப் போலவும், மேலாகவும் இன்னும் பலர் தத்தமது கடமையை ஆற்ற வேண்டியிருக்கிறது. நீ அவர்களுடன் இருந்தால் அவர்கள் களமிறங்கி கடமையை ஆற்ற மாட்டார்கள். உன்னையே நம்பியிருப்பார்கள். ஆதலால், நீ என்னிடம் வந்து இளைப்பாறிக் கொள், ஓய்வெடுத்துக் கொள் மகனே. உன்னை நினைத்தே, நீ விட்டு வந்த கடமையை அவர்கள் தொடரட்டும். தேவை ஏற்பட்டால், வேறொரு இளைஞராக உன்னையே (நம்மாழ்வாரையே) கூட, இளமையாக அனுப்பி வைக்கலாம் என்பதே எனது (இயற்கையின்) எண்ணம். ஏனெனில், காலம் உள்ளவரை கடமையைச் செய்வதென்பது, என்னைத் தவிர வேறு யாராலும் இயலாததே. இதுவே, நான் உயிரினங்கள் அனைத்திற்கும் வகுத்துள்ள பொது நியதி. நான் கடமை தவறினால், என்னையே நான் அழித்துக் கொள்கிறேன் என்று, உனக்கு தெரிந்தது எனக்கு தெரியாதா… என்னை காக்க அரும்பாடுபட்டவரை, நானே அரவனைத்துக் கொள்வதில், நீ என்ன அநியாயத்தை கண்டாய்? அற்பர்களுக்கு தரும் வாழ்நாளை கூட, கடமையாளர்களுக்கு தர மறுக்கிறேன் என எண்ணுகிறாயே! எப்படி வாழக் கூடாது என்பதற்கு அத்தாட்சியாகவே அற்பர்களை உங்களின் கண்முன் வைத்து, அற்புதமான கடமையாளர்களை உங்களின் மனதில் நிறுத்துகிறேன். இப்போது சொல் என்னால், யாருக்கு எ(ண்ண, ன்ன) நட்டம்…’ இதனை இந்நூலில் தெளிவுபடுத்த வேண்டிய நீயே ஏன் இப்படியெல்லாம்…. என்கிற தெளிவானதொரு உதயம், துயிலெழுந்ததுமே தோன்றிற்று. எனவே, நம்மாழ்வார் மட்டுமன்று; ஒவ்வொரு கடமையாளரும் நம்மோடே இருக்கிறார்கள் என்று எனது எழுத்துக் கடமையில் மீண்டும் மூழ்கி விட்டேன். நன்றிகள்:திரு.வாரென்ட் பாலா, சட்ட ஆராய்ச்சியாளர்,http://www.neethiyaithedy.org/?p=1036

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்