மோன்சாண்டோ
































நேற்று சென்னை மெரீனாவில் மான்சான்டோவிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசார அணிவகுப்பின் சில புகைப்படங்கள். ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது!பங்குகொண்ட அனைவரும் மான்சான்டோவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியினை ஏற்றுகொண்டோம் ! இதனை ஏற்பாடு செய்த Safe Food Alliance Chennai அமைப்பிற்கு மிகப்பெரிய நன்றி . கூத்துப்பட்டறை யில் இருந்து நல்லதொரு விழிப்புணர்வு நாடகத்தினை அமைத்து கொடுத்த அந்த கலைஞர்களுக்கு நன்றி . மேலும் பங்கேற்ற அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் . சென்னை மட்டுமல்லாது நேற்று உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இவை நடந்தது. இந்த எதிர்ப்பு இதோடு நின்றுவிடாது தொடர்ச்சியாக நாம் அனைவரும் நாம் இந்த மண்ணில் இருந்து மான்சாண்டோவை அகற்றும் வரை ஒன்றுசேர்ந்து போராட வேண்டும். கடந்த நாற்பது வருடங்களாக மான்சான்டோ கம்பெனி நம் விவசாய நிலங்களையும் ,நமது விவசாயிகளையும் பாழ்படுத்தி விட்டது. மான்சாண்டோ விதைகள் ஆரம்பத்தில் நல்ல மகசூலை தந்தாலும் ,போக போகத்தான் அதன் விஷத்தன்மையை காட்ட ஆரம்பித்தது .மரபணு மாற்றப்பட்ட பயிர்களை (பி.டி.பருத்தி , பி .டி .கத்தரிக்காய் போன்ற ) பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளுக்கு நம் விதர்பா விவசாயி களின் எண்ணற்ற தற்கொலைகளே சான்று ! அதுமட்டுமல்லாது தினம் தினம் நூற்றுகணக்கான மக்கள் கேன்சர் உள்ளிட்ட பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள். தமிழ்நாட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடை நீடிப்பது வரவேற்குரியது . அதே சமயம் ஆந்திரா ,ஒரிசா போன்ற நாட்டின் பல மாவட்டங்களில் மான்சாண்டோ மிக வேகமாக கால் ஊன்றி வருகிறது . இப்படியே சென்றால் நம் விவசாயம் முழுவதும் மான்சாண்டோ அரக்கனுக்கு பலிகொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும் . இந்த மண்ணில் இருந்து மரபணு மாற்றப்பட்ட விதைகளையும்,பயீர்களையும் தூக்கிஎறிந்து விட்டு ,நமது பாரம்பரிய விதைகளை விதைப்போம்! இந்த மாற்றம் நம் அனைவரிடம் இருந்தும் தொடங்க வேண்டும் ! நம்முடைய உணவு முறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் ! மான்சான்டோ தயாரிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும்.அதற்கு மாற்றுவழியாகநமது முன்னோர்கள் கண்ட விவசாய வழிமுறைகளை நாம் பின்பற்ற தொடங்க வேண்டும் !இக்காலத்திற்கு அவை எல்லாம் பொருந்தாது , இவையெல்லாம் உடனே சாத்தியபடாது என கூறுவதை தவிர்த்து, இக்கால இக்கால தலைமுறைனற்கு அதன் அவசியத்தை உணர வைத்து ஒரு பெரும் மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்கலாமே !

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013