Posts

Showing posts from February 16, 2014

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன் இரண்டு இனிய சேதிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. வெளியிடப்பட்ட இருபதே நாட்களில், ‘முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’ நூல், இரண்டாம் பதிப்பை அடைந்துள்ளது. ’இனிப்பு’ நூல் விரைவில் இரண்டாம் பதிப்பை அடைய உள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான 22/01/14 ஆம் நாள்தான், இந்த இரு புத்தகங்கள் வெளியாகின. இதுவரை, எந்தப் பெரிய நூல் விற்பனைக் கடைக்கும் நாங்கள் அவற்றை அனுப்பவும் இல்லை. சில நிகழ்ச்சிகளில் விற்றதோடு சரி. ‘இயல் வாகை’, ‘வானகம்’, ‘பூவுலகின் நண்பர்கள்’, ‘புத்துயிர் பதிப்பகம்’ ஆகிய நான்கு அமைப்புகளும் தமது நிலையங்களில் இப் புத்தகங்களை முன்னிறுத்தின. இவ்வமைப்புகளுக்கும் இவற்றின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி. எனது இனிய நண்பரும் வானகம் பொறுப்பாளரும், தொடு சிகிச்சையாளருமான ஏங்கெல்ஸ் ராஜா, கம்பம் அகாடமி முதல்வர் தோழர் உமர் பரூக், தொடு சிகிச்சையாளரும் இனிப்பு குழு உறுப்பினருமான அருள் ஒளி ஆயோரின் பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. நாடெங்கும் உள்ள தொடு சிகிச்ச...

தெய்வம் உணாவே’ -மரபும் உணவும் ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan 14 minutes ago ’தெய்வம் உணாவே’ -மரபும் உணவும் ம.செந்தமிழன் நமது மரபு மற்றும் உணவு குறித்து நான் எழுதியுள்ள நூல், ’தெய்வம் உணாவே’ -மரபும் உணவும். அந்த நூலில் இருந்து சில பகுதிகள்: ………….. காடுகளில் எவ்வளவோ தாவரங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரே ஒரு தாவரத்தை ‘இது உணவுக்கானது’ என நீங்கள் புதிதாகக் கண்டு பிடியுங்கள். நிறைய அல்ல, ஒன்றே ஒன்றைக் கண்டு பிடித்தால் போதும். அப்படிக் கண்டு பிடிப்பதோடு நில்லாமல், அது எப்படிப்பட்ட உணவு, அதன் மருத்துவ குணம் என்ன, அதைச் சமைக்கும் முறை என்ன எனவும் நீங்கள் கூற வேண்டும். இதை முயற்சித்துப் பார்த்தால், மரபின் அருமை புரியும்! ……… ஒரு கிலோ எள்ளின் விலை நூறு ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரை மாறுபடுவதுண்டு. நாம் சராசரியான ஐம்பது ரூபாயைக் கணக்கிடுவோம். ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்க, இரண்டே கால் கிலோ எள் தேவை. இதன் சராசரி விலை, ரூ. 112.50. மணத்திற்காகவும், தரத்திற்காகவும் எள்ளுடன் பனை வெல்லம் சேர்க்கும் வழக்கம் நமது மரபில் கடைப் பிடிக்கப்படுகிறது. மேற்கண்ட அளவுக்கு நூறு கிராம் பனை வெல்லம் சேர்க்கலாம். இதன் மதிப்பு அதிகபட்சம் ரூ...

gmo ??????

http://www.fssai.gov.in/Portals/0/Pdf/INDIAN_FOOD_CODE(25-06-2012).pdf