Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others
இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்!
ம.செந்தமிழன்

இரண்டு இனிய சேதிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.
வெளியிடப்பட்ட இருபதே நாட்களில், ‘முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’ நூல், இரண்டாம் பதிப்பை அடைந்துள்ளது. ’இனிப்பு’ நூல் விரைவில் இரண்டாம் பதிப்பை அடைய உள்ளது.
சென்னைப் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான 22/01/14 ஆம் நாள்தான், இந்த இரு புத்தகங்கள் வெளியாகின. இதுவரை, எந்தப் பெரிய நூல் விற்பனைக் கடைக்கும் நாங்கள் அவற்றை அனுப்பவும் இல்லை. சில நிகழ்ச்சிகளில் விற்றதோடு சரி. ‘இயல் வாகை’, ‘வானகம்’, ‘பூவுலகின் நண்பர்கள்’, ‘புத்துயிர் பதிப்பகம்’ ஆகிய நான்கு அமைப்புகளும் தமது நிலையங்களில் இப் புத்தகங்களை முன்னிறுத்தின. இவ்வமைப்புகளுக்கும் இவற்றின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி. எனது இனிய நண்பரும் வானகம் பொறுப்பாளரும், தொடு சிகிச்சையாளருமான ஏங்கெல்ஸ் ராஜா, கம்பம் அகாடமி முதல்வர் தோழர் உமர் பரூக், தொடு சிகிச்சையாளரும் இனிப்பு குழு உறுப்பினருமான அருள் ஒளி ஆயோரின் பங்களிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன.
நாடெங்கும் உள்ள தொடு சிகிச்சையாளர்களும் பிற மரபுவழி மருத்துவர்களும் தமது சிகிச்சை நிலையங்களில் இந்த இரு நூல்களையும் விற்பனை செய்து கொண்டுள்ளனர். பொதுமக்களில் சிலர், தாம் படித்த பின்னர் இந்த இரு நூல்களையும் தமது சுற்றத்தாருக்கு வாங்கி அன்பளிக்கின்றனர்.
முகநூல் நண்பர்கள் அளித்துக் கொண்டுள்ள ஆதரவு அளப்பரியது. உங்களுக்கு செம்மையின் நன்றிகள்.
விற்பனைப் பொறுப்பாளர் விஜயன் கதிர்வேல், அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கிக் கொண்டுள்ளார். நூல்களை வாசித்த மக்கள் அவரிடம் தினசரி மணிக் கணக்கில் பேசிக் கொண்டுள்ளனர். சிலவேளைகளில், அவரும் நெகிழ்ந்து போவதாகச் சொல்கிறார்.
இவைபோக, இணையத்தில் செம்மை வெளியீட்டகம் நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. முதலில், இனிப்பு நூல் இப்போது இணையத்தில் உள்ளது.
அமேசான் (Amazon) கூகுள் ப்ளே ஸ்டோர் (Google play store) ஆகிய இரு தளங்களிலும் உள்ளது இனிப்பு.

‘முதல் மழை....’ யும் இந்தத் தளங்களில் ஏற்றப்படவுள்ளது.

கட்டணம் செலுத்தி, தரவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் கைப் பேசிகளில் கூட இனிப்பு தவழும் இனி. விரைவில் இனிப்பு ஆங்கில நூல் வெளியாகவுள்ளது.
உலகெங்கும் உள்ள நம் மக்கள், அலோபதி கொடுமையிலிருந்து தப்புவதற்கான எளிய வழியாக இது அமைய வேண்டும் என விரும்புகிறேன்.
மேலும், எமது எல்லா நூல்களும் இணையத்தில் ஏற்றப்பட உள்ளன.
https://play.google.com/store/books/details/Senthamizhan_Maniarasan_Inippu_%E0%AE%87%E0%AE%A9_%E0%AE%AA_%E0%AE%AA?id=84zbAgAAQBAJ&hl=en

https://www.amazon.in/dp/B00IITSJ8U

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013