பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்! பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது. பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா? “நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம். “இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர். உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, ...