Senthamizhan Maniarasan 20 December 2012 அறிவார்ந்த மேதைகளே உலகைக் காப்பாற்றுங்கள்! -டிசம்பர் 21 குறித்த செய்திகள் (இணைப்பு ஒளிப்படம்: @Paul Gregory – சத்தியமங்கலம், திம்பம் மலையிலிருந்து ) உலகம் அழியுமா அழியாதா என்ற கேள்வி, மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினையையும் தராமல் உலா வருகிறது. மாயன்கள், இயற்கையின் ஆற்றல்களைப் பெற்ற முன்னோடிகள். இயற்கையைச் சிதைக்காமல், வாழத் தெரிந்தவர்கள். இயற்கையின் பேராற்றலை உணர்ந்து அதை வணங்கி வாழ்ந்தவர்கள். காலம் கடந்து நிற்கும் அவர்களது ஆற்றல்களின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கூட, தற்போதைய ‘உலக அழிவு’ பற்றிய செய்திகளை என்னால் உணர முடிகிறது. இந்தச் சமூகத்திற்கு, மாயன்களின் பேரால், ஒரு முக்கியமான பாடம் கற்றுத் தரப்படுவதாகவே எண்ணுகிறேன். மாயன் நாட்காட்டியை முன்னிட்டு பேசப்படும் ’அழிவு’ எனும் கருத்து, பரபரப்புச் செய்திக்கானதல்ல. ‘அனைத்தையும் வென்றுவிட்டோம். எங்கள் அறிவே மேன்மையானது. இயற்கையை வென்றவர்கள் நாங்கள்’ எனும், மனிதகுலத்தின் அறிவுத் திமிரை, எள்ளி நகையாடிக் கொண்டுள்ளது இயற்கை. எந்த சுனாமியையையும் தடுக்க இயலாமல், எந்த நில அதிர்வையும் தாங்கவியலாமல், எ...