. பிராய்லர் கோழி அல்ல நமக்கான உணவு.

மனிதர்கள் அனைவரின் தேவை மகிழ்ச்சியும், நலமும் தானே. தீமை தரும் சமையல் உணவை குறைத்து அல்லது முற்றிலுமாக நீக்கி, உடல் நலம் காக்க பழங்களையும், கொட்டைப் பருப்புகளையும் உண்ணலாம். வறுத்தது, பொறித்தது, சாலையோர கடைகளில் விற்கப்படும் துரித உணவுகள், காபி, தேநீர் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு இளநீர், பதநீர் போன்றவற்றை அருந்தியும், பழவகைகளை உண்டும் வாழலாம். பிராய்லர் கோழியை உற்பத்தி செய்வது அதிக அளவில் தண்ணீர் விரையமாகும் தொழில். அதன் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கின்றன. செயற்கை முறையில் அந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படும் கடுமையான இரசாயன மருந்துகள், ஹார்மோன் ஊசிகள் போன்றவற்றினால் அதைச் சாப்பிடுபவர்களுக்கு கடுமையான நோய்களை உருவாக்கின்றன. மலட்டுத் தன்மையை உருவாக்குகின்றன. அசைவ உணவுகள் கடுமையான மலச்சிக்கலை உண்டுபண்ணுகின்றன. மலச்சிக்கலே பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. அதிகமான நார்ச்சுத்துள்ள பழங்களும், தேங்காய் போன்ற கொட்டைப் பருப்புகளுமே நமககுத் தேவையானவை. பிராய்லர் கோழி அல்ல நமக்கான உணவு.
Like ·  ·  · 16 January at 18:16

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013