வேப்பம்பூ காரக்கொழம்பு:-

வேப்பம்பூ காரக்கொழம்பு:- கிராமங்களில் வீட்டு முற்றத்து வாயிலில் நிழலுக்காக நட்டு இருப்பார்கள். பல இடங்களில் தெய்வமரமாகவும் வழிபடப்படுகின்றது. பழைய காலத்தில் தோப்புக்களாகவும் இருந்தன. இதனின்று வீசும் இதமான காற்று உடலுக்கு நன்மைகள் தரும். இள வேனிற் காலத்தில்; பூக்கும் வேப்பம் பூவின் வாசம் காற்றில் கலந்து வந்து சுகந்த மணத்தை தரும். இந்தியா,இலங்கை, பர்மாவில் வளரும் மூலிகை மரம் இது. 15- 20 மீற்றர் உயரம்வரை வளரக் கூடியது. 5 வருடங்களின் பின் பூத்துக் காய்கும். ஜனவரி -மார்ச் மாத காலத்தில் பூக்கும். மரம் பூக்கள் நிறைந்து காணப்படும். மரத்தின் கீழ் பாயை விரித்து வைத்து பூக்களை எடுப்பார்கள். சிலர் மரத்தில் ஏறி பறித்து வெயிலில் காயவைத்து எடுப்பார்கள். "வயிறு சுத்தமாகவும், ஏப்பத்தை போக்கவும் வேப்பம் பூ உதவுகிறது."‪#‎வேப்பம்பூ_காரக்கொழம்பு‬… தேவையான பொருள்:. வேப்பம் பூ : 1 கப் புளி : பெரிய எலுமிச்சை அளவு வெங்காயம் : 2 தக்காளி : 1 பூண்டு : 1 கொழம்பு மிளகாய் தூள்: 2 1/2 டீஸ்பூன் வெந்தயம் : 1/2 டீஸ்பூன் கடுகு : 1/2 டீஸ்பூன் மஞ்சத்தூள் : 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி உப்பு : தேவையான அளவு - வேப்பம்பூவை எண்ணெயில்லாமல் பொன்நிறமாக வறுத்து பொடித்து வைத்து கொள்ளவும். - 3 டம்ளர் அளவு தண்ணீரில் புளியை கரைத்து சாறு எடுத்து வைத்து கொள்ளவும். - தக்காளி வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.‪#‎செய்முறை‬ : கடாயில் எண்ணெய் ஊத்தி காஞ்சதும் கடுகு வெந்தயம் போட்டு தாளிச்சு பிறகு உரித்த பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி புளிக்கரைசலை ஊற்றி கொழம்பு மிளகாய் தூள், மஞ்சத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு பொடித்து வைத்திருக்கும் வேப்பம்பூவை கொதியலில் பரவலாக தூவி நன்கு கலக்கி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும். சூடான கசப்பு சுவை கலந்த ஆரோக்யமான வேப்பம்பூ காரக்கொழம்பு ரெடி. [பி.கு நகரங்களில் வேப்பம்பூ மளிகை கடைகளில் 100 கிராம் 20 ரூபாய்க்கு கிடைக்கும்]

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013