மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

மரபு மருத்துவத்தால் முடியும்!
சவாலும் சான்றுகளும்

-ம.செந்தமிழன்


ஆங்கில மருத்துவ முறையில், நீரிழிவு நோயை ‘குணப்படுத்த’ முடியாது என்பது, நடைமுறை உண்மை. இதுவே, ‘இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டத்திலும்’ கூறப்பட்டுள்ளது. பிற மரபு மருத்துவங்களால் இந்நோயைத் தீர்க்க முடியாது எனச் சட்டம் கூறவில்லை, ஆங்கில மருத்துவர்களில் சிலர் கூறுகிறார்கள்.
நேர்மை என்ற உன்னத மதிப்பீட்டின் வழியே இச்சிக்கலை அணுகினால் மட்டும் போதும், உண்மையின் கதவுகள் உங்களுக்குத் திறக்கும். அறிவியல் என்பது ஆங்கில மருத்துவ உலகிற்கு மட்டுமே சொந்தமானது என சிலர் எண்ணுவது, மூடநம்பிக்கை என்பதே என் கருத்து.
ஆங்கில மருத்துவர்களுக்கு நேர்மை இருந்தால், ‘நீரிழிவு நோயை எங்கள் மருந்துகள் குணப்படுத்தாது’ என மக்களிடம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், ஆண்டுக் கணக்கில் மக்களை மருந்து அடிமைகளாக்கி, இறுதியில் உறுப்புகளை நீக்கி முடமாக்கும் பாவச் செயலில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.
அல்லது, ஆங்கில மருத்துவ முறையில், நீரிழிவு நோயை குணமாக்கி, சட்டத்தைத் திருத்த வேண்டும்.
மரபு மருத்துவங்களில், நீரிழிவு மட்டுமல்ல, பல்வேறு நோய்களும் முற்றிலும் குணமாக்கப்படுகின்றன. சித்த மருத்துவத்தின் தொன்மையில் இல்லாத அறிவியல்தான், ஆங்கில மருத்துவத்தில் இருக்கிறது என சிலர் நம்பினால், அதற்கு மரபு பொறுப்பல்ல.
குறிப்பாக, நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்திக் கொண்டிருக்கும் ‘தொடு சிகிச்சை’ நிபுணர்களை நான் அறிவேன். எனது முந்தைய பதிவில் கருத்திட்டுள்ள, ஆங்கில மருத்துவர், ‘மரபு மருத்துவத்தில் நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களை குணப்படுத்தினால், நான் மருத்துவத் தொழிலையே விட்டு விடுகிறேன். இச்சவாலில் எனது இது நாள்வரையிலான சம்பாத்தியத்தையும் வைக்கிறேன்’ என்று சவால் விடுத்துள்ளார்.
(If any medicine cures diabetes,AIDS,hypertension,Dementia for ever, I am ready to quit my practice. If it doesn't,what will you do- unscientific Tamil intellectual? I'll bet all my earnings and my life upon it,dare you,bro?)
நண்பர்களே, இது ஒருவருக்கு ஒருவர் சவால் விடும் விளையாட்டோ, சண்டையோ அல்ல. மக்களின் வாழ்வாதாரம் குறித்த உரையாடல். நம் பிள்ளைகளை, பெற்றோரை, சுற்றத்தை நோய்களுக்குப் பலியாக்காமல், மருந்துகளுக்குப் பலியாக்காமல் காக்கும் முயற்சி. இதில் சவால் வேண்டாம்.
ஆயினும், அந்த மருத்துவ நண்பருக்கு நிரூபணங்களைக் காட்ட நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
அவர் விரும்பினால், கம்பம் அக்குபங்சர் அகாடமியின் திரு.உமர் பரூக், இந்திய அக்குபங்சரின் தந்தை திரு.பஃஸ்லூர் ரகுமான், மூத்த அக்கு சிகிச்சையாளர் திரு.போஸ் முகமது மீரான், தொடு சிகிச்சையாளர் திரு.ஏங்கெல்ஸ் ராஜா உள்ளிட்டோரது சிகிச்சை மையங்களுக்குச் சென்று பார்க்கலாம். அங்கு சிகிச்சை பெரும் மக்களிடம் நேரடியாக உரையாடி விளக்கம் பெறலாம்.
திரு. பஃஸ்லூர் ரகுமான், ஆங்கில மருத்துவத்தில் M.B.B.S. MD பட்டம் பெற்றவர். சென்னையில் மருந்தில்லா மருத்துவம் மேற்கொள்ளும் மருத்துவர் இரா.கனகசபாபதி M.B.B.S. MS பட்டம் பெற்றவர். இன்னும் பலர் இவர்களைப் போல, ஆங்கில மருத்துவ முறையின் பாவச் செயல்களில் பங்கெடுக்க விருப்பமின்றி விலகி, மாற்று மருத்துவ முறைகளில் நன்மைகள் புரிகின்றனர்.
எனது அனுபவத்தில் நானும் சிலருக்கு தொடு சிகிச்சை அளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களிடமும் விளக்கம் பெறலாம். சாட்சிகள் எண்ணற்றவை.
நீடித்த நோய்களுக்கு இயற்கை மருத்துவம், தொடு சிகிச்சை உள்ளிட்ட மரபு மருத்துவ முறைகள் சிறந்த பலன் தருவதைத் தமிழக அரசும் அங்கீகரித்துள்ளது. குறிப்பாக, தொடு சிகிச்சை முறை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பாடமாகவே இணைக்கப்பட்டுவிட்டது.
சவால் விட்டுள்ள மருத்துவ நண்பரிடம் நாம் எதிர்பார்ப்பது, சரியான புரிதலைத்தானே தவிர, அவரது ‘இதுநாள் வரையிலான சம்பாத்தியங்களை’ அல்ல. அவை நமக்குத் தேவையும் இல்லை.
எனக்கு அறிவியல் தெரியுமா தெரியாதா என்பதை, முக நூலில் காட்ட விரும்பவில்லை. முதலில், உங்கள் மருத்துவ முறையின் அறிவியலைப் பயன்படுத்தி, நீரிழிவு நோய்க்கு மருந்து தயாரித்துக் காட்டுங்கள். நான் எனக்குத் தெரிந்த அறிவியலைக் கொண்டு என்னாலான சிகிச்சைகளை, எவ்விதக் கட்டணமும் பெறாமலே என் சுற்றத்தாருக்கு செய்து கொண்டுள்ளேன். உங்கள் அறிவியல், பெரு நிறுவனங்களின் கொள்ளைக்குத்தான் பயன்படும் என்பதை அறம் அறிந்தோர் உணர்ந்தே இருக்கிறார்கள். எங்கள் அறிவியல், எளியோருக்கானது. அது அப்படியே இருக்கட்டும்.
இவ்வாறான இகழ்ச்சியுரைகள் உங்களுக்கு எந்த நன்மைகளையும் தராது. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. உங்கள் ஆற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள்.
’நீரிழிவு நோய் எனக்கு இருந்தது. நான் தொடு சிகிச்சையின் வழியாக முற்றிலும் நலமடைந்துவிட்டேன்’ என பல்லாயிரம் மக்கள் தங்கள் கைப்பட எழுதி, கையொப்பம் இட்டுத் தந்துள்ளனர். அவற்றை நீங்கள் பார்வையிடலாம். இவை தவிர, எண்ணற்ற வீடியோ நேர்காணல்களும் உள்ளன. இவையும் போதாதென்றால், அவ்வாறு சிகிச்சை பெற்று நலமடைந்தோரை நேரில் சந்திக்கலாம்.
நீரிழிவு நோய்க்கு மட்டுமல்ல, ஆங்கில மருத்துவம் மிரட்டிப் பணம் பிடுங்கும் எல்லா நோய்களுக்கும் மேற்கண்ட செய்திகள் பொருந்தும்.
உண்மையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் உள்ளே வரலாம்.

தொடர்பு எண்கள்:
1. திரு. போஸ் முகமது மீரான், மதுரை - 9345213425
2. திரு. – ஏங்கெல்ஸ் ராஜா, சென்னை – 7639967739
3. திரு. மகி இராமலிங்கம், கோவை – 9786818380
4. திரு. மாவீரன், ஈரோடு - 9976537443
 — with Saravanan Karate and 16 others.

Comments

Popular posts from this blog

pls stop gm field trial in indian land and we dont want gm foods we are not rats pls save our agriculture from monsanto and big multinational companys

போராட்டம் ஒன்றே தீர்வு