தேங்காய்

தேங்காய் முழுமையான உணவு

தேங்காய் என்றாலே கொலஸ்ட்ரால் என்று வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. இயற்கையான பச்சைத் தேங்காயில் நல்ல கொழுப்பே உள்ளது. அதனை அரைத்துக் கொதிக்க வைப்பதினாலேயே அது கெட்ட கொழுப்பாக மாறுகிறது. ஒரு நேரம் பச்சைத் தேங்காயை உணவாக எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் உண்டு. பற்கள் பலமாக இருப்பவர்கள் தேங்காயை நன்கு மென்று தின்று வரலாம். பற்களில் பிச்சனை இருப்பவர்கள் தேங்காய்ப் பூ எடுத்து அதனை வாயிலிட்டு மென்று தின்னலாம். முதியோர்கள் தேங்காய்ப்பால் எடுத்து அதனை சிறிது சிறிதாக (முடிந்தால் ஒரு தேக்கரண்டியினால்) வாயில் ஊற்றி அதன் சுவை மறையும்வரை வைத்திருந்து உமிழ் நீருடன் விழுங்குங்கள்.

பயன்கள்
1. தேங்காயை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் இருக்காது.
2. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும்
3. குடல் புழுக்களை அறவே நீக்கிவிடும்.
4. வறண்ட தோல் இருக்காது.
5. தேங்காயும், வாழைப் பழமும் சாப்பிட்டு வந்தால் காலில் உள்ள பித்த வெடிப்புகள் மறையும்.
6. பொடுகு பிரச்சனை குறையும், அல்லது அறவே நீங்கும்.
7. தோல் தொடர்பான வியாதிகளுக்கு ஒரே தீர்வு தேங்காயை உண்பதுதான்.
8. தேங்காயுடன் பேரிச்சம்பழத்தைச் சேர்த்து உண்டால் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள காயங்கள் ஆறும், முதுகு வலி குணமாகும். உடலின் அனைத்து மூட்டுகளிலும், இணைப்புகளிலும் உள்ள வலிகள் குறையும். தொடர்ந்து தேங்காயைப் பயன்படுத்தினால் இந்த வலிகள் அறவே நீங்கிவிடும்.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013