நடைப் பயிற்சி

நடைப் பயிற்சி

வாழும் சித்தர் கொ.எத்திராஜ் அய்யா அவர்கள் நடைப் பயிற்சி பற்றி கூறுவது.

நல்ல காற்றோட்டமான, போக்குவரத்து வாகனங்களின் புகை இல்லாத இயல்பாகவே மனதிற்கு அமைதி தரும் அதிகாலை அல்லது மாலை வேளைகளில் வேறு எந்தவிதமான சிந்தனையுமின்றி கை, கால்களை நன்றாக ‍வீசி நடக்க வேண்டும். கை,கால்களின் அசைவுகள் மூலமாகத்தான் மூளையின் பணியும், நாளமில்லா சுரப்பிகளின் செலும் புத்துணர்வு அடைகின்றது. பொதுவாக நமது உடலில் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது, கை, கால்களின் அசைவுக்கு ஏற்ப சீராக இருக்கின்றன.

நடைப் பயிற்சி முடிந்த பின்பும் நமது உடல் சுறுசுறுப்பாக இருப்பதை உணர வேண்டும். மாறாக சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால் நடையின் வேகத்தை குறைக்க வேண்டும். உடல் சேர்ந்து போகும் வண்ணம் அதிக வேகத்தில் நடந்தால் "கொழுப்பு" கரைவதற்கு பதிலாக நமது தசை நார்களில் உள்ள சர்க்கரை சத்து கரைந்து போவதால் உடம்பு இளைக்காமல் அசதி மட்டும்தான் மிஞ்சும் என்பதை மறக்கக்கூடாது.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013