Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.
எவ்வளவு ஆத்திரப்பட்டாலும், தீர்வுகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன, இன்னும் பெருகத்தான் போகின்றன.

அலோபதி குறித்த தகவல்களை எந்த ஊடகத்தில் எழுதுகிறேனோ அதே ஊடகத்தின் வழியாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். முகவரி கேட்கும் அலோபதி ஆதரவாளர்களும், மருத்துவர்களும் முகநூல் வழியாகவோ, நான் எழுதும் அச்சு ஊடகங்கள் வழியாகவோ என் மீது சட்ட நடவடிக்கை கோரலாம். அல்லது, படம் வெளியான பின்னர் அதன் தயாரிப்பு நிறுவனம் வழியாக நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் சட்ட ஆலோசகர்களை அணுகினால், வழி சொல்லுவார்கள்.

இந்திய மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டப்படி அலோபதியில்தான் சர்க்கரைக்கு ‘தீர்க்கும்’ மருந்து இல்லை. மரபு மருத்துவ முறைகளில் ‘தீர்க்க்கும்’ மருந்து இல்லை என இந்தியச் சட்டம் கூறவில்லை. இப்போது எனது கட்டுரைக்கு எதிராகப் பொங்கும் அலோபதி மருத்துவர்கள் எனக்கு எதிராக அல்ல, இந்தியச் சட்டத்திற்கு எதிராகப் பொங்குகிறார்கள். பொங்கட்டும். இதை அவர்கள் நீதிமன்றத்தில் வாதிடட்டும்.

இதேவேளை, மரபு முறைகளின் மீது அலோபதிக்காரர்களுக்கு இருக்கும் கேலி, கிண்டல், கோபம் உள்ளிட்ட சகல எண்ணங்களையும், தர்க்கப்பூர்வமான கேள்விகளையும் எனது படத்திலேயே கேட்கலாம் என ஏற்கனவே அறிவித்துள்ளேன். இப்போதும் வலியுறுத்துகிறேன்.

உங்களிடம் கேட்க வேண்டிவை ஏராளமாக உள்ளன.
நீங்கள் படித்தவர்கள், அறிவாளிகள் என்ற எண்ணத்தில் விடுக்கப்படும் அழைப்பு இது. உங்களில் எவர் சிறந்தவரோ அவரே வரலாம். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எனக்கோ என்னைச் சார்ந்தவர்களுக்கோ பதிலே தெரியாமல் போகட்டுமே, நாங்கள் வெட்கித் தலைகுனிந்து நின்றுவிட்டுப் போகிறோமே. அந்தவெற்றியை நன்றாகக் கொண்டாடுங்களேன். இப்போது செய்வதைப் போல.

ஆனால், படப்பிடிப்புக்கு வருவதைத் தவிர்த்து விடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013