Senthamizhan Maniarasan 31 October 2013 வயது அறியாதோர் பேறுபெற்றோர்! ம.செந்தமிழன் பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வேளையில், நானறிந்த இரகசியம் ஒன்றை உங்களுக்குத் தெரிவிப்பது என் கடமை. நீண்ட ஆயுள், நிறைந்த மனம் ஆகிய இரண்டின் வேர்களைத் தேடி நான் எனது நண்பர்களுடன் மேற்கொள்ளும் எல்லாப் பயணங்களிலும் இதுவரை எனக்குக் கிடைத்தவற்றின் சாரம் இது. மனம் நிறைந்த வாழ்க்கை வேண்டுமெனில், அறியாமை அவசியம். வாழ்க்கைக்கு வெளியே நடப்பவற்றின் மீது கவனமே இல்லாமல் இருக்கையில், மனம் நிறைகிறது. வாழ்க்கைக்கு வெளியே இருப்பவற்றை வாழ்க்கையின் உள்ளே அனுமதிக்கும்போது, ஒப்பீடுகள் காளான்கள் போல் முளைக்கின்றன. ஒவ்வொரு கணமும், நமது ஒப்பீடுகள் மழையாய் பொழிந்து காளான்களை வளர்த்தெடுக்கின்றன. எந்த மனிதரும் தன்னுடன் பிறரை ஒப்பிடுவதும், எந்தக் குடும்பமும் தம்முடன் பிற குடும்பத்தை ஒப்பிடுவதும், ஒருபோதும் மனநிறைவுக்கான வழிகள் அல்ல. தேவைக்கு அதிகமான பொருட்களின் மீதும், ஒப்பனைகள் மீதும் பற்று கொள்வது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நஞ்சாக்கும் வல்லமை கொண்ட குணங்கள். எது தேவை ...