விவசாயி facebook

இது ஏழை விவசாயியின் அபலக்குரல்

படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்!
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்னு,
சொல்லுவாங்க…
நீங்கள்ளாம் மெத்தப்படிச்சவங்க
தாய் மண்ணையும், உயிர் தண்ணியையும்
கெடுக்க வழி பாக்குறீங்க!
என்னென்னமோ கண்டுபிடிச்சீங்க,
எல்லோரும் வசதியாயிருக்கீங்க!
தினம்தினம் மண்ணோட போராடுற
எங்ககிட்ட மல்லுக்கட்டுறீங்க!
நான் மட்டும் சாப்பிடவா
ஏரை பிடிக்கறேன்?
ஊருக்கே படைக்கத்தானே
உழுது மடியறேன்!
உழுவுற நிலத்தை வளைச்சுப்போட்டு
மச்சாக்கிட்டீங்க!
இருக்குற சொச்சமும்
வீணாப் போக வேலைபாக்குறீங்க!
மழை இல்லை, தண்ணீஇல்லை
பாழாப்போன கரண்டும் இல்லை
வசதியா விவசாயம் பண்ண
எங்ககிட்ட பண்மும் இல்லை
வறண்ட பூமி வானம் பாத்துகிடக்க
அப்படி என்னதான்யா சுரண்டுறிங்க
ரசாயனத்தை கலக்குறீங்க
அது என்ன மீத்தேனோ, மலைத்தேனோ
நிலத்துல கொண்டாந்து புதைக்கிறீங்க?
பெத்த பொண்ணா பொத்திவளர்த்த
ஏங்க மண்ணை நாசமாக்கி மோசம் பண்ணிட்டீங்க
எங்க பூமி எங்களுக்கில்லைன்னு
எங்களை விரட்ட வழி பாக்குறீங்க...
ஏரோட்டீயை முடமாக்கி
சோறாக்க முடியுமா?
வேதி மாத்திரை சாப்பாட்டுக்கு
நடைப் பெணமாய் வாழுங்க!
பெத்தவங்கலையே ஒதுக்கிவைக்கிற காலத்துல
மத்தவங்களையா நினைக்க போறீங்க?
என்னமோ போங்க ...
எங்காத்தா சாகும்போது
காசு பணம் கையிலகொடுக்கல
ஒரு பிடி மண்ணைதான் சொத்தா கொடுத்தா!
அதையிம் கேக்குறீங்க்ளே!!
- கலைசெல்வி சரவணன்

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013