போகாதே

இந்திய வனம் மற்றும் மரபியல் மரப்பேருக்கு ஆராய்ச்சி நிறுவனம்(IFGTB) உள்ள முக்கிய விஞ்ஞானி ஒருவரை சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததேன்.அவர் கூறியதாவது இன்று நம் இந்திய நாட்டில் பயின்று தன்னை வெளிநாடுகளுக்கு அடமானம் வைப்போர்தான் அதிகம் என வருத்தங்களை தெரிவித்தார்."நமது மூளைதான் உலக நாடுகள் வளர்ச்சிக்கு பெரும் மூலதனமாக திகழ்வதாக .சில சக்திகள் நேரடி வேலைவாய்ப்பு என்னும் பெயரில் படிக்கும் போதே சிறந்த மாணவர்களை திருடிக்கொண்டு போகின்றனர்.நமது நாடு பல ஆராய்ச்சியாளர்களை இழந்துகொண்டே வருகிறது,நமது நாட்டின் இந்த மோசமான நிலை மாறவேண்டும்,எனவே "உமேஷ்" நீங்களும் வெளிநாட்டு சக்திகளுக்கு விலைபோய் விடாதீர் என அறிவுரை கூறினார். என்னை அடுத்த 8-மாத காலம் இந்திய அளவில் மேற்கொண்டு வரும் "நமது பாரம்பரிய மரங்கள்"தொடர்பான மிகமுக்கிய ஆரய்ச்சியில் என்னை இணைத்துக்கொள்ள விரும்பினார்,நானும் ஆராய்ச்சியில் எனது பங்களிப்பு அவசியம் இருக்கும் என இசைவு தெரிவித்தேன்.
~இந்தியா/தமிழ் நாட்டுக்காக நமது மூச்சுள்ளவரை வாழ்வோம்~இந்தியாவும் வல்லரசாகும் ஒரு நாள்,
வல்லரசு விரும்பி இவன்,
உமேஷ் மருதாசலம்
08-11-2013

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013