Senthamizhan Maniarasan 7 November 2013 இனிப்பு: அலோபதி மருத்துவர்களுக்கு மரபு மருத்துவர்களின் வெளிப்படையான அழைப்பு! ம.செந்தமிழ


இனிப்பு: அலோபதி மருத்துவர்களுக்கு மரபு மருத்துவர்களின் வெளிப்படையான அழைப்பு!
ம.செந்தமிழன்

அலோபதி மருத்துவர்களுக்கு ஒரு வெளிப்படையன அழைப்பு. உங்களிடம் வரும் மக்களில் எவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என நீங்கள் ‘கண்டு பிடிக்கிறீர்களோ’, அவர்களை, இனிப்பு ஆவணப்படக் குழுவினரிடம் அனுப்புங்கள். எந்தவிதமான மருந்துகளும் கொடுக்காமல் அனுப்புங்கள். மரபு மருத்துவ முறைகளின் வழியாக அம் மக்களை முற்றிலும் நலப்படுத்தி அனுப்பும் கடமை எங்களுடையது. இந்த சிகிச்சை முறைகள் அப்படியே படமாக்கப்படும். இனிப்பு ஆவணப்படத்தில் வெளியிடப்படும். சிகிச்சை முடிந்ததும், சிகிச்சை பெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் நேர்காணல்களும் இனிப்பில் இடம்பெறும்.

இதேவேளை, அலோபதி மருத்துவத்தினைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்களில் சிலரது உடல்நலம் குறித்த தகவல்களை இனிப்பு படத்தில் வெளியிடுவோம். அவர்களது உடல் நிலை எதனால், இந்த நிலையை அடைந்தது என அலோபதி மருத்துவப் பிரதிநிதிகள் நேரடியாக விளக்கம் தர வேண்டும். எந்த அலோபதி மருத்துவர், எம்மிடம் சிகிச்சைக்கு மக்களை அனுப்புகிறாரோ, அதே மருத்துவர் இந்த நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

இதற்காகவே, பொதுமக்கள் பிரதிநிதிகள் சிலரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த நேர்காணலை நடத்த நாங்கள் தயார். உங்களில் எந்தப் பெரிய நிபுணரும் இதில் பங்கேற்கலாம். அவர் எந்த நாட்டில் பட்டம் பெற்றவராகவும் இருக்கலாம்.

நீங்கள் அனுப்பும் ‘சர்க்கரை நோயாளிகள், மரபு மருத்துவ முறைகளின் வழியாக முற்றிலும் நலமாக்கப்பட்டனர்’ என நிரூபிக்கப்பட்ட பின்னர், இந்தச் சவாலில் பங்கேற்கும் அலோபதி மருத்துவர்கள் ‘இனி நான் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க மாட்டேன்’ என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அதேபோல, மரபு முறைகளில் அந்த மக்களை நலமாக்க முடியாமல் போனால், சிகிச்சை அளித்த மரபு மருத்துவர்கள், ‘இனி நாங்கள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என வெளிப்படையாக அறிவிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

எந்த வகை சர்க்கரை நோயாளிகளை அனுப்புவது என்பதை அலோபதி மருத்துவர்களே முடிவு செய்யலாம். வீணாக, எந்த வகை சர்க்கரை என என்னிடம் கேள்வி கேட்டு காலம் கடத்தத் தேவையில்லை. நீங்கள் எந்த வகை ’நோயாளியை’ வேண்டுமனாலும் அனுப்புங்கள்.

முக்கியமான நிபந்தனை, நீங்கள் அனுப்பும் நோயாளி, ஒரு முறை கூட சர்க்கரை நோய்க்காக மருந்து உட்கொண்டிருக்கக் கூடாது’. உங்கள் மருந்துகளின் நச்சுக் கழிவுகளை மனித உடலில் இருந்து நீக்குவதற்கே குறிபிட்ட காலம் ஆகிறது என மரபு மருத்துவர்கள் வருந்துகிறார்கள்.

’மரபு மருத்துவ முறைகள் எல்லாம், நிரூபிக்கப்படாதவை, அலோபதிதான் அறிவியல்பூர்வமானது’ என அலோபதிக்காரர்களும் அம்முறையின் ஆதரவாளர்களும் தொடர்ந்து பரப்புரை செய்கின்றனர். பொதுமக்களுக்கும் இவ்வித அறியாமை இருக்கிறது. அதை நேரடியாகச் சந்திக்க நாங்கள் தயார்.

இந்த அழைப்பை ஏற்க விரும்புவோர், இனிப்பு ஆவணப்படக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.அருள் ஒளி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவரது தொடர்பு எண்:
7200571621.

தினசரி இரவு, 8:30 முதல் 9:30 வரை அவரிடம் பேசலாம்.
 — with Chelliah Anand and 20 others.

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013