இனிப்பு via facebook

இனிப்பு நலக் கூடல்! தீர்வுகளை முன் வைக்காத விமர்சனங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்பது என் அழுத்தமான நம்பிக்கை. நம் முன்னோர் ஏராளமான மருத்துவ முறைகளை இனம் கண்டார்கள், உருவாக்கினார்கள். எந்த நோயாகினும் அதை விரட்டும் வழி கண்டார்கள். இது, இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகால மரபின் தொடர்ச்சி. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளியிலேயே, பல் மருத்துவர் இருந்தார் என்கின்றன, அகழ்வாய்வுகள். அகத்தியரிடமும், திருமூலரிடமும் தீராத நோய் ஒன்று இந்த புவியில் இருக்கும் என நான் நம்பவில்லை. அவர்கள் அணுவின் கருவைப் பற்றிப் பாடிய மேதைகள். இவ்வளவு நீண்ட, மெய்யறிவு வழிப்பட்ட மரபின் பிள்ளைகள், அற்பமான சர்க்கரை நோய்க்கு அஞ்சுவது பேதமை. தமிழ், சீன மரபுகளின் செழுமையை உள்வாங்கி வளர்ந்துள்ள தொடு சிகிச்சை முறையும், உணவியல் சிகிச்சை முறைகளும் இணைந்து சர்க்கரையை விரட்டுவதை இப்போது பரவலாகக் காண முடிகிறது. நான் கண்ட நன்மைகளை, சமூகத்துக்கு அறிவிக்கும் பொருட்டு, இனிப்பு நலக் கூடல் ஏற்பாடு செய்யப்படுகிறது. இக்கூடலில், சர்க்கரை நோய் குறித்த தர்க்கப் பூர்வமான, இயற்கை வழிப்பட்ட விளக்கம் அளிக்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்குச் சிகிச்சையும் துவங்கப்படும். இந்த ஒரு முறை மட்டுமல்ல, நோய் தீரும் மட்டும், இவர்களுக்கு சிகிச்சை தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகவெளி வாழ்வியல் நடுவம், இந்நிகழ்வினை, ஒழுங்கு செய்துள்ளது. அதிக எண்ணிக்கையில், பங்கேற்றால் முறையாகவும் கவனமாகவும் அக்கறை எடுத்துக் கொள்ள இயலாது என்பதால், 50 பேர்களை மட்டுமே, இந்நிகழ்விற்காக பதிவு செய்ய உள்ளோம். நோயினால் பாதிக்கப்பட்டோரும், துணையாக ஒருவரும் மட்டும் வருக. நோய் தீர்ந்து நலம் பெறுக!

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013