மருத்துவம் via facebook

” அசத்தல் செல்போன் வைத்தியரம்மா “ உணவே மருந்து : ” கூட்டு குடும்ப முறை “ நம் கலச்சாரத்தின் மையப்பகுதியாக இருந்த காலத்தில் வீட்டில் யாருக்காவது உடல் உபாதைகளோ அல்லது தீராத நோய்களோ கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த போது ஆபாத்பாந்தவனாக நம் வீட்டில் ஒரு “ பாட்டி “ கண்கண்ட நாட்டு மருந்துகளை கைப்பக்குவத்தில் நமக்கு செய்து கொடுத்து, மருத்துவமனையே செல்லாமல், நோய்களை வந்த இடம் தெரியாமல் ஓட வைத்துக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அந்த பாட்டிகளில் பலபேரை முதியோர் இல்லத்துக்கு ஓட வைத்து விட்ட்தனாலும் அல்லது மருமகள் டார்ச்சர் தாங்க முடியாமல் எல்லாம் தெரிந்தும் ” வாய் மூடி மெளனிகளாகவே “ வாழ்ந்து வருகிறார்கள். அந்தப் பாட்டிகளின் வழித்தோன்றலாக (ஜீன்கள் மாறாமல் ) நம் நாட்டில் இன்னும் சில பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கொங்கு மண்டலத்தை ( கோவையை) சேர்ந்த தொப்பம் பட்டியில் வசித்து வரும் ” என்.எம். மயூரி “ அவர்கள். இந்த நவீன மையமாக்கல் உலகில் ஆங்கிலம் தெரியாமல் கூட ஆங்கிலத்தை வெறும் பந்தவுக்காக பேசி வருபவர்கள் மத்தியில், இன்னமும் தன் மண்ணின் மொழியான கொங்கு தமிழையே தன் பேச்சில் மாறாமல் பேசிவதோடு , அந்த சிறப்பான ” பாரம்பரிய பாட்டி வைத்திய சேவையை ” தன் வீட்டோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தொலைபேசி வாயிலாக ஆண், பெண் என அனைவருக்கும் எந்த வித வணிக நோக்கமுமில்லாமலும் ” இலவசமாக இயற்கை வாழ்வியல் நுட்பங்களையும், மருத்துவ ஆலோசனைகளையும் சொல்லி சரியான வழி காட்டியாக விளங்குகிறார் இந்த வைத்தியரம்மா . குழந்தை பேறு இல்லாமல் நித்தமும் மருந்து , மாத்திரை, ஆப்ரேசன், ஊசி, டெஸ்ட் டியூப், ஸ்கேன் என அனைத்துக்கும் செலவழித்ததோடு மட்டுமில்லாமல், அதன் பக்கவிளைவுகளால் அன்றாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் பலர் இவரை ( மயூரி ) நேரில் கூட பார்த்த்தில்லை . தொலைபேசியிலே அனுகி இவர் கூறும் எளிய ” இயற்கை வாழ்வியல் நுட்பங்களை “ ( உணவே மருந்து ) கடைபிடித்து இன்று தாய்மை பேறு அடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் “ அதிகப் படியான உடல் எடையையும் ( கொழுப்பு) “ அதனால் உண்டாகும் சர்க்கரை, இருதய, மன அழுத்தம், மூட்டுவலி… என அனைத்துக்குமே நோயின் ஆதி மூலத்தை அறிந்து அதை உணவின் மூலமே சரி செய்தும் வருகிறார். மேலும் முடி கொட்டி ஷாம்பு, சோப்பு, ஆயில் என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் மகளிருக்கு நம் மண்ணின் மூலிகையான கருவேப்பில்லை சாறு, நெல்லிக்காய் சாறு, கரிசலாங்கனி கீரை சாறு, மூடக்கத்தான் கீரை சூப் என குடிக்க சொல்லி அதன் மூலமே தீர்த்து வருகிறார். மேலும் நஞ்சில்லா சிறுதானிய உணவுகளில் செய்யப் படும் அடை, இட்லி, தோசை… மட்டும் பல இயற்கை உணவுகள் செய்வது பற்றிய செய்முறை விளக்கங்களையும் அளித்துவருகிறார். அதை சொல்வதொடு மட்டுமில்லாமல் போனிலே சரியாக பின்பற்றுகிறார்களா? என கேட்டுக் கொண்டேயும் இருக்கிறார். இதன் பலனாய் பலர் தன் நோய்களை சரி செய்து விட்டு அதற்காக நன்றி தெரிவித்து கடிதங்களையும், சரியான மருத்துவ ரிப்போர்டடுகளையும் அனுப்பி வைக்கின்றனர். தன் சேவைக்கு சிவகாசியை சேர்ந்த பிரபல “ அடுப்பில்லா சமையல் நிபுணரும் ” சிவகாசியில் தாய் வழி இயற்கை உணவகம் என்னும் மூலிகை உணவகத்தை நடத்தி தொலைபேசி வாயிலாக பலரது நோய்களைப் போக்கி, சமூக சேவை ஆற்றி வரும் ” திரு. மாறன். ஜி “ அவர்களே முன்மாதிரி என கூறி அதற்கான நன்றியையும் மனதார கூறுகிறார் மயூரி அம்மா அவர்கள். இந்த மனித நேய சேவையை செய்ய எப்போதும் தயாராக காத்து கொண்டிருக்கிறார். நீங்களும் அழைக்க .. தொப்பம்பட்டி மயூரியம்மா – Cell : 98650 49013, 73055 81359. சிவகாசி திரு. மாறன். ஜி cell : 93674 21787

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013