கீரை

வெந்தையக் கீரை

நான் காலை, இரவு இரண்டு நேரங்களிலும் பழங்களையும், தேங்காய் போன்ற கொட்டைப் பருப்புகளையும் உண்ணும் பழக்கம் உடையவன். மதியம் ஒரு நேரம சமைத்த உணவுகளை குறிப்பாக வேகவைக்கப்பட்ட காய்கறிகளை அதிகம் உண்ணும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாக மதியம் வெந்தையக் கீரையைச் சமைத்து உண்டு வருகிறேன்.

சமைக்கும் முறை - வெந்தையக் கீரையை சுத்தம் செய்து இலைகளை மட்டும் பறித்து, அதனுடன் பாசிப்பருப்பைச் சிறது சேர்த்து ஒரு சில சின்ன வெங்காயங்களையும், சீரகத்தையும் சேர்த்து உப்பின்றி வேக வைத்து அதனுடன் தக்காளி சிறிதாக நறுக்கியது, சிறிது தேங்காய்ப் பூவைச் சேர்த்து சாப்பிட்டேன் மிகச் சுவையாக இருந்தது. சிறிதளவே கசப்புடன் இருந்தாலும் அந்தச் சுவை மிகவும் பிடித்தமானதாக இருந்தது. முயற்சித்துப் பாருங்களேன்.
Like ·  ·  · 28 January at 22:08

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013