திரு.நெல் ஜெயராமன் ஐயாவின் பணி குறித்த

விதைப் போராளி விதைக்கப்பட்டுள்ளார்....

எல்லோரும் மரங்களைப் பற்றியும், செடிகளை பற்றியும் பேசும் போது ஒரு சிலர் மட்டுமே விதைகளை பற்றிய வீரிய கவனம் செலுத்தினர். விதைகள் பேராயுதம், மேலும் விதைகளை விருட்சமாக்கவும் செயல்பட்டவர்கள் மத்தியில் பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்ற முனைப்புடன் செயல்பட்டவர் நெல்திரு. ஜெயராமன். மனித உயிர் நீண்ட காலம் வாழ அடிப்படை விதைக்கும் விதைகள் தரமானதாக இருக்க வேண்டும். அந்த தரமான விதைகளை உடல் நலத்திற்கு ஏற்ற விதைகளை தந்தது நமது பாரம்பரிய விதைகளே. விதையில்லா விதைகளை கண்டுபிடித்து விதவை விதைகளை உருவாக்கும் நவீனயுகத்தில் பாரம்பரிய விதைகளின் பண்பை உலகிற்கு உணர வைத்தவர். இது மாதிரி சமூகப் போராளிகள் இறக்கும் பொழுது அவர்களின் செயல்பாடுகளை மற்றவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியது நமது தார்மீக கடமை. அதை நோக்கிய சிறு கல்லாவது ஒவ்வொருவரும் தன்  வாழ்நாளில் நகர்த்த முற்படவேண்டும். இன்றைய தலைமுறைவேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் நமது பாரம்பரிய விதை மீட்பு செயல்பாட்டில் தீவிரமாக இயங்க வேண்டும். இதுவே அவரின் ஆன்மாவை சாந்தி அடைய செய்யும். நாங்கள் அனைவரும் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இயற்கை இறையை வேண்டுகிறோம்.
கௌசிகா நதி( via Facebook)

Comments

Popular posts from this blog

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013