ban inam

இனம் என்ற பெயரில் வந்தேரியர்கள் பணம் செய்கிறார்கள்

ரன் ..சண்டகோழி ..ஜி..ஆனந்தம் படங்களை இயக்கிய லிங்குசாமி கதை நாயகன்கள் ..கதை (சதை) நாயகிகள் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்கள் ..
லிங்குசாமியே முதலில் நீவீர் தமிழரா ?தெலுங்கரா ?
சந்தோஸ் சிவன் மலையாளி எங்கள் கேள்வி அவருக்கு தேவை இல்லை ...

இனம் படம் என்ன சொல்கிறது ...???

ஸ்டான்ன்லி என்ற கதா பாத்திரம் ....கருணாஸ் ..அவர்களுக்கு தமிழ் போராளிகள் என்றால் முதலில் பிடிக்காது போலவும் ....2009 போரில் நாடே பற்றி எறியும் பொது அவரும் அவர்கள் உள்ளிட்டோரும் மண்ணிற்காய் போராடாமல் போராடுபவர்களை பிடிக்காமலும் தனியே அதே நாட்டில் வாழ்வதும் ...பின்னர் தன் மனைவியை சிங்களன் தொட்டு நாச படுத்தும் போதுதான் என் குடும்பம் முன்னிட்டு எதை வேணாலும் செய்வேன் என்று கூரி சிங்களனை தாக்கிட கட்டை எடுக்கிறார் ..ஒவ்வொரு போராளியும் மண்ணிற்காய் போராடுபவர்கள் ..கண்முன்னே நடந்த கொடுரம் கண்டு உரிமை சுகந்திர விடுதலை தேடுபவர்கள் ....தனக்கு என்று வரும் போது மட்டும் கருணாஸ் கதாபாத்திரம் எதை வேணாலும் செய்திடும் .. ஏன் சிங்களன் எதிர்த்து ஏன் தமிழர்கள் களம் கண்டார்கள் என தெரியாதா ?இயக்குனரே ?
கருணாஸ் பள்ளி ஆசிரியர் தமிழ் பிள்ளைகளுக்கு ஆங்கில பாடம் எடுக்கிறார் ..அப்போது தமிழ்புலி பெண்படையினர் வகுப்பறை கரும் பலகையில் வெள்ளை துணியை மாட்டி புலிகளின் கள செயல்களை காட்டுவது போல ஒரு காட்சி கருணாஸ் கதா பாத்திரம் முகம் சுளிக்கும் ..அது வழியே இயக்குனரே சொல்வது என்ன ...சிறுவர்களை புலிகளாக ஆக்கினார்கள் என்றா ?இல்லை வலிந்து போராளிகளாக ஆக்கபடுகிரார்கள் என்றா ?
சிங்களன் ராணுவ கட்டமைப்பு உடன் காட்டப்பட்டு உள்ளார்கள் ..ஆனால் புலிகள் யாவரும் சிறுவர்களாக கட்டமைப்பு இல்லாதவர்கள் போல காட்ட பட்டதன் நோக்கம் ?....அனைத்து படையணி கொண்டு களம் ஆடிய தமிழ் படையணிகள் குறித்து நீவீர் அறியவில்லையா ?மேலும் ஏதோ வேண்டும் வேண்டாததை போல தமிழர் படையணி போராட்டம் குறித்து காட்சி படுத்தி இருப்பது ?என்ன ?
மேலும் லீடர் என்று சொல்லும் போதும் படையினர் குறித்து சொல்லும் போதும் ஏதோ நகைப்புக்கு உரியது போல காட்சி ..படம் பேரு இனம் from celone ...இக்கதை தமிழருக்கா ? சிங்கள வெறியருகா ?
யாரை திருப்பதி broththers திருப்தி படுத்திட ??
மேலும் ஒரு தமிழ் பெண் கலவரத்தில் காடையனால் அசுத்தபடுத்தபட்டு அதில் பிறந்த பெண் குழந்தை தான் படத்தின் கதை சொல்கிறதா ?
ஒரு பவுத்த துறவி தமிழ் குளத்தில் தண்ணீர் பிடிப்பது போல ஒரு காட்சி அப்போது தண்ணீரை வடிகட்டி எடுக்கிறார் ....மீன்கள் துணியில் சிக்குகிறது ..மீன்களை மீண்டும் தண்ணீரில் விடுகிறார் ..அக் காட்சி நோக்கம் மீன்களுக்கு கூட துரோகம் இழைக்காத ஒரு நல்ல சிங்கள புத்த துறவி அதுவம் சிங்கள் வெறியர் நாட்டில் ..அந்த துறவி தமிழ் குழந்தைகளுக்கு மாதுளை பழம் உண்ண கொடுப்பாராம் ...தயாரிப்பு இயக்குனருக்கு அந்த நாட்டில் அமைதி திரும்பாமல் தமிழருக்கு எதிராக மடை திருப்பும் வேலைகளை கட்டு அவிழ்த்து விடுவதில் துறவிகளின் பங்கும் உண்டு என்று தெரியாதா ?
சிங்கள காடையன் படையணி தலைவர் ஒருவர் நல்லவராம் படத்தில் ...
பெண்களை பிடித்து வன் புணர்ச்சி செய்வதாய் காட்சி அது கண்டு அந்த சிங்கள படை தலைவர் மனம் நோகிரராம் ..அவர்கள் எம் நண்பர்கள் ..போர்தான் அவர்களை மிருகம் ஆக்கி விட்டது என்று வசனம் வேற ...
அக் காட்சி சம்பவம் சரியா ..தவறா சொல்லவே இல்லை ....
சரிதா கதாபாத்திரம் சுனாமி அக்கா என்று ஒரு பெயரில் அதரவு அற்ற குழந்தைகளை வளர்ப்பார் ..பின்னர் குழந்தை திருமணம் பண்ணி வைப்பார் ..
அதிலும் அந்த பால் முகம் கலையாத மழலைகள் உடல் சுகத்திற்கு அலைவது ஏங்குவது போல ஒரு காட்சி ....தயாரிப்பு இயக்குனரே உங்கள் பச்சிளம் குழந்தைகள் அப்படிதான் சுகத்திற்கு ஏங்கும் அலையுமா?அந்த உந்தலில் தானே நீங்கள் அதை காட்சி படுத்தி உள்ளீர்கள் ?அவர்களயே கொண்டாந்து நடிக்க வைத்து இருக்கலாம் ....பெருமையாக இருக்கும் அல்லவா ...?
சிறுவர்களை எல்லாம் போராளிகள் ஆக்கி உள்ளார்கள் என்பது போல பல பதிவுகள் ...பின்னர் இறுதியாக தமிழர் எல்லாம் வருத்தபடுவோம் என்று எண்ணி சரிதா சுனாமி அக்கா எம் நாடு எம் உரிமை என முழங்கி சிங்களன் குண்டு அடி பட்டு செத்து போகும் ...
தமிழ் ஈழ குழந்தைகள் எல்லாம் வெளி நாடு ஏதிலிகளாக போவது போல அவர்களை கேலி பண்ணுவது போல ஒரு காட்சி ......எமது வாழ்வு நகைப்புக்கு உரியதோ ?மேலும் படுத்த படுக்கையாக ஒரு தமிழ் முதியவர் ஆங்கில அரை குறை ஆடை அணிந்த கவர்ச்சி புகை படங்களை பார்ப்பது போல ஒரு காட்சி ...போராட்ட வாழ்வு கொண்டவர்களை அசிங்க படுத்துவது போல ...மேலும் எதிரிகள் தம் மண்ணில் உள்புக விடாமல் இருக்கவே பூமி அடி வெடிகள் ..அது வெடிக்காமல் இருக்கவே ஒருவர் அதன் மேலே உற்கார்ந்து வாழ்வது போல ஒரு காட்சி .......
முடிவாக ஈழத்தின் போராட்டத்திற்கு உதவி புரியாது போனாலும் கொச்சை படுத்திட வேண்டாம் ..
தமிழர் வீரம் ..உண்மை போராட்டம் ..தமிழ் இன படுகொலை..அதன் வலி ..
தமிழ் படும் பாடு ..எதிரிகளின் கோர முகம் ...ஏன் ஈழம் அதன் நன்மை உரிமை ..புலிகள் போராட்டம் ஏன் எதனால் எப்படி ..என்று எதுவும் இல்லை ..
மேலும் லீடர் செத்து விட்டார் கழுத்தை அறுத்து விட்டார்கள் ..கருத்து யாரை மகிழ்விக்க ? யார் அந்த லீடர் ...யாவரும் நலமே.. யாவரும் தலைவரே போராளியே ஈழம் மலரும் ஒரு உயிர் மாவீரர் ஆனால் ஆயிரம் ஆயிரம் பிறக்கும் இனமடா ..உண்மை தெரியாத திராவிட மூடர்களே ....
மொத்தத்தில் ஈழம் வைத்து அரசியல் செய்து வகுறு வளர்த்தார்கள் ...அரசியல் வியாதிகள் ....இன்று கலை படைப்பாளிகள் ஈழம் வைத்து இனம் என்று படம் செய்து பணம் சம்பாரிக்க கலையை கொலை செய்து விட்டார்கள் .... எப்போதும் எல்லாம் இழந்து வந்தாரை வாழவும் ஆளவும் வைத்து தமிழன் ...நாலு பேரு உண்ண சுவையான மனித கறி...மனிதம் கொன்று மிருகம் வாழும் நாட்டில் ..இறுதியில்யாதும் ஊரே யாவரும் கேளிர் என படம் முடியும் ...2009 ல் 40000 பேர் போரில் இறந்தார்கள் அவர்களுக்கு சபர்ப்பணம் இந்த இனம் FROM CEYLONE
படம் எடுத்தவன் தமிழர் அல்ல ..தமிழ் தேசிய வாதிகள் தமிழ் நாட்டில் குறைவு படத்தை என்ன செய்திட இயலும் ...லிங்கு சாமி சொன்னதாக தகவல் ...பார்க்க வேண்டிய படம் என்று ராஜா பக்சே மனித நேயர் சொன்னதாக தகவல் உணர்வுள்ள மெய் தமிழர்கள் மட்டும் பின்னூட்டம் இடுங்கள் ..மேலும் நான்... என்ன சொல்லி உள்ளார்கள் இப்படத்தில் என தயாரிப்பாளருக்கு நல்ல "லாபம் "தரும் வகையில் மட்டும்தான் இனம் FROM CEYLONE படம் பார்த்தேன் ...பின்னுட்டத்திலும் வருகிறேன் ..உணர்வுள்ள மெய் தமிழர்கள் மட்டும் பின்னூட்டம் இடுங்கள்........

Comments

Popular posts from this blog

pls stop gm field trial in indian land and we dont want gm foods we are not rats pls save our agriculture from monsanto and big multinational companys

போராட்டம் ஒன்றே தீர்வு

மரபு மருத்துவத்தால் முடியும்! சவாலும் சான்றுகளும் -ம.செந்தமிழன்