pls sign
http://www.change.org/petitions/chief-minister-of-tamilnadu-dr-j-jeyalalitha-stop-the-methane-project-in-tamilnadu
methane project will make agri lands to waste land and many farmers will leave from agriculture and also in United states it will waste many agir lands and people suffered from this project also many dangerous chemcials will be used in this project so pls stop and save the farmers of tamilnadu http://www.facebook.com/deltamethane
மத்திய அரசு தி கிரேட் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு கடந்த 2010 ஜுலை மாதம் தஞ்சை மண்டலத்தில் மீத்தேன் வாயு மற்றும் நிலக்கரி எடுப்பதற்கு அனு மதி வழங்கியுள்ளது. மீத்தேன் வாயு 30 ஆண்டுகளுக்கும், நிலக்கரி தோண்டுவதற்கு 100 ஆண்டுகளுக்கு என 691 சதுர கி.மீ. தூர பரப்பளவில் அனுமதி அளித்துள்ளது.
இங்கே கிடைக்கும் நிலக்கரி, நெய்வேலி நிலக்கரியை விட தரமானது என்று கூறுகின்றனர்.
இந்த இடத்தில் 2,000 அடியிலிருந்து 10,000 அடி ஆழம்வரை நிலத்தினை தோண்டி உப்புநீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர் அதனால் நல்லநீரும் இல்லாமல் போவதுடன் கடல்நீர் நிலத்தடியில் புகுந்துவிடும். தஞ்சை மண்டலம் பாலைவனமாக மாறிவிடும், 50 இடத்தில் முதல்கட்டமாக இந்தப் பணி துவங்கினாலும், அது மேலும் பல்வேறு மாவட்டங்களுக்குத் தொடரும் வாய்ப்பு உள்ளது. 130 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் போடப்பட்டுள்ளது.
நிலத்தடியில் உள்ள உப்புநீரை வெளியேற்றி அதனை இப்பகுதியில் செல்லும் வாய்க்கால்மூலம் கடலில் கலக்கவிடுவார்கள். கடல்நீரை போன்று 5 மடங்கு அடர்த்தி கொண்ட இந்த உப்புநீரை வெளியேற்றினால். நிலத்தடியில் நல்ல தண்ணீர் இல்லாமல் போய்விடும். அந்த வெற்றிடத்தில் கடல் நீர் புகுந்துவிடும்.
இந்த பாதிப்பு மேலும் பல்வேறு மாவட்டங்களில் தொடரும். விவசாயம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும். விவசாயம் இருப்பதால்தான் காவிரி நீர் வேண்டி நாம் போராடுகிறோம் ஆனால் விவசாயம் இல்லை என்றால் காவிரி நீர் இல்லாமல் போகும். தருமபுரி முதல் காரைக்கால் வரை 12 மாவட்டங்களில் காவிரி நீரைக்கொண்டு செய்யப்பட்டு வரும் விவசாயம் ஒழிவதுடன், காவிரி நீரை நம்பி வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குக் குடிநீர், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தென் தமிழகத்திற்கு குடிநீர் என்று தமிழகத்தின் 3ல் 2 பகுதியினர் காவிரியை நம்பி குடிநீர் பெரும் இந்த நிலையும் தலைகீழாவிடும். ஆக தஞ்சை மண்டலம் பாலைவனமாக மாறுவதுடன் அது தமிழகம் முழுவதும் பரவும் ஆபத்தும் உள்ளது.
இரண்டரைகோடி பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். இவர்களுக்கு தொழில் மட்டுமின்றி வாழ்வாதாரமே விவசாயம்தான். அந்த வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறது இந்த அரசு. ஆகவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண் டும்.
மக்களவை தேர்தலில் இந்த திட்டத்தை எதிர்க்கும் கட்சிகளை மட்டுமே இப்பகுதி மக்கள் ஆதரவு அளிப்பார்கள். இந்த திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிடவேண்டும். இதனை வலியுறுத்தி ஜனவரி 25ஆம் தேதி மன்னார்குடியில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
நன்றி @Prabakar Kappikulam

Comments
Post a Comment