முகநூலில் எழுதியவர் https://www.facebook.com/jayaraman.v.o வெளிச்சம் படாத வேர் மயிலாடுதுறை குத்தாலம் அருகில் உள்ள ஊர் வில்லியநல்லூர். திருமணஞ்சேரிக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம். இந்த ஊர் பெருமாள் கோவில் பட்டாசாரியாராக இருந்தவர் சேஷாத்ரி. இவரின் மகன் ராகவன். பசு ராகவன் என்றால் பலருக்கும் தெரியும். பள்ளிப்படிப்பை குத்தாலம் Board High Schoolல் முடித்தார். அப்போதைய பள்ளி கூட தோழர் மாயவரம் முன்னாள் MLA ஜெக. வீரபாண்டியன். பள்ளிப்படிப்பை முடித்த ராகவன் வேலை தேடி சென்னை வந்து திருவல்லிக்கேணியில் கெல்லட் ஹை ஸ்கூல் எதிர்புறம் உள்ள Mansionல் தங்கியிருந்தார். இடதுசாரி சிந்தனை கொண்டவராக இருந்தார். பக்கத்து ரூமில் பூபதி என்ற ஸ்வயம் சேவக் இருந்தார். அந்தப் பகுதி பிரசாரக்காக அண்ணன் வெங்கடாத்ரி இருந்தார். ராகவனை சந்தித்து பேசும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தமே உயர்ந்தது, உங்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று தட்டிக் கழித்தார். மனம் தளராத வெங்கடாத்ரி உங்கள் கேள்விகளுக்கு விடை சொல்ல ஒருவர் இருக்கிறார், என்னுடன் வாருங்கள் என்று சேத்துபட்டு சங்க காரியா...